உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

 மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

புவனகிரி: புவனகிரி தாலுகா மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவமனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் மணவாளன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு நிர்வாகிகள் அன்புதாஸ்,ஜெயகனி, ஸ்ரீதேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி தாலுகா, மருத்துவமனையில் காலியாக உள்ள ஊழியர்கள், ஆபரேஷன் தியேட்டர் உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும்; புறகாவல்நிலையம் அமைக்க வேண்டும்; மகப்பேறு மருத்துவத்திற்கான சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை