உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மல்லர் கம்பம் போட்டி; மாணவர்கள் அசத்தல்

மல்லர் கம்பம் போட்டி; மாணவர்கள் அசத்தல்

பண்ருட்டி; பண்ருட்டி ஜான்டூயி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் மல்லர் கம்பம் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது. போட்டியில் 8 முதல் 14 வயதுகுட்பட்ட 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மல்லர் கம்ப பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக தலைவர் ஜனார்த்தன், மாவட்ட மலர்லர் கம்ப தலைவர் ராமசந்திரன், நல்லாசிரியர் அசோகன், இணை செயலாளர் நிதின்ஜோஷ்வா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். ஜான்டூயி பள்ளி மாணவர்கள் 2 ம் இடம் பிடித்தனர்.இதில் பொருளாளர் மணிபாலன், செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் பாபு, கலைவாணன், பயிற்சியாளர்கள் புருேஷாத்தமமன், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ