உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாளிகைக்கோட்டம் இணைப்பு சாலை

மாளிகைக்கோட்டம் இணைப்பு சாலை

பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் - கொசப்பள்ளம் கிராம இணைப்பு தார் சாலையை பயன்படுத்தி, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், இரவில் வருவோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, குண்டும் குழியுமான மாளிகைக்கோட்டம் - கொசப்பள்ளம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை