உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெடி பொருட்களை பதுக்கியவர் கைது

வெடி பொருட்களை பதுக்கியவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே அரசு அனுமதியின்றி வெடி பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேர்க்காம்பாளையம்,மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன்,54; இவருடைய வீட்டில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்ய வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நடுவீரப்பட்டு போலீசார் பிரபாகரனை கைது செய்து,வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை