உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

கடலுார் : கடலுாரில், மொபட்டில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், ஏட்டுகள் சுந்தர்ராஜன், ஆனந்தபாபு ஆகியோர் நேற்று மாலை சாவடி சோதனைசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, 90 மி.லிட்டர் அளவு கொண்ட 313 புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில் புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு,48; எனத்தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பாலகுருவை கைது செய்து, மது பாட்டில்களையும், மது கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி