உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீச்சரிவாளுடன் மிரட்டியவர் கைது

வீச்சரிவாளுடன் மிரட்டியவர் கைது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாத்தமாம்பட்டு அம்மன் கோவில் அருகில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு சாலையில் செல்பவர்களை ஒருவர் மிரட்டிக்கொண்டிருந்தார். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். அவர் சாத்தமாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த சசிக்குமார், 30; என்பது தெரியவந்தது.நடுவீரப்பட்டு போலீசார் சசிக்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ