மேலும் செய்திகள்
சாலையை கடக்க முயன்றவர் லாரி மோதி பலி
16-Dec-2024
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், நெம்பலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 44, லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, டாரஸ் லாரியை கொத்தட்டை டோல்கேட் அருகே நிறுத்திவிட்டு, தூங்கினார். அப்போது மர்ம நபர் அவரை இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறிக்க முயற்சித்தார். உடன் கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் மர்ம நபரை மடக்கி பிடித்து, புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீபெரம்புதுார் இருங்காட்டுக்கோட்டையை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ராஜேஷ், 24, என்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேைஷ கைது செய்தனர்.
16-Dec-2024