மேலும் செய்திகள்
கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
15-Dec-2024
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்தவர் செல்வமணி. 35. இவர் தனது மனைவி இளவரசி, 32, மகன் லோகேஷ், மகள் யுவஸ்ரீ ஆகியோருடன் கடந்த 22ம் தேதி விருத்தாசலம் - சேலம் சாலையில் பைக்கில் சென்றனர்.மணலுார் மேம்பாலம் அருகே சென்றபோது தவறி விழுந்தனர்.இதில் தலையில் பலத்த காயமடைந்த செல்வமணியை, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
15-Dec-2024