வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக பூஜை துவக்கம்
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கடந்த 28ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம்நடந்தது. கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கோவில் செயல்அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் சரவணரூபன் மற்றும்கோவில் பட்டாச்சாரியார் தேவநாதன் ஆகியோரை அய்யப்பன் எம்.எல்.ஏ.,பாராட்டினார். நேற்று மாலை மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.