மேலும் செய்திகள்
பைக் திருடிய வாலிபர் கைது
01-Dec-2024
நெய்வேலி பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
10-Dec-2024
கடலுார், : மந்தாரக்குப்பம் ரவுடியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன், 69; மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 29ம் தேதி, கடையில் இருந்தபோது, மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ், 43; கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை பறித்து சென்றார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.இவர், மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம் பரிந்துரைத்தார்.அதையேற்று, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்படி கடலுார் மத்திய சிறையில் உள்ள ரமேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.
01-Dec-2024
10-Dec-2024