உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மாரத்தான் ஓட்டப்பந்தயம்

நடுவீரப்பட்டு; சாத்திப்பட்டு மதர்தெரசா பள்ளி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்தில், மாரத்தான் ஓட்டப்பந்தயம் துவங்கி இடையர்குப்பம், நெல்லித்தோப்பு வழியாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தடைந்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், தேவநாதன் துவக்கி வைத்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி மெல்கியோர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் எழுமலை வரவேற்றார். காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கடலுார் அரசு மருத்துவமனை இணை இயக்குனரின் செயலர் மணிபாலன் பரிசு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ