உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் விளையாட்டரங்கம் மேம்படுத்த அளவீடு பணி

கடலுார் விளையாட்டரங்கம் மேம்படுத்த அளவீடு பணி

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் சிந்தடிக் ஓடுதளம், வடிகால் அமைக்கும் பணிக்காக மைதானம் அளவிடும் பணி நடந்தது.கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் 15 கோடி ரூபாய் மதிப்பில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படும் என கடலுாரில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று அளவிடும் பணி துவங்கியது. இதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் அளவீடு செய்து, மைதானத்தில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைப்பது குறித்தும், சிந்தடிக் ஓடுதளம் அமைப்பது குறித்தும் முதற்கட்ட அறிக்கையை அதிகாரிகள் தயார் செய்ய உள்ளனர். இதற்காக மைதானம் அளவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி