உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் 

வி.ஏ.ஓ.,க்களுக்கு மருத்துவ முகாம் 

கடலுார்:கடலுார் சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவம னை நிறுவனர் ராஜேந்திரன், நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்கள் சுரேந்தர் குமார், வினோத்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமைதுவக்கி வைத்தார். முகாமில்ரத்த அழுத்தம், சர்க்கரைஅளவு, இசிஜி, எக்கோ, இருதய பரிசோதனை, பெண்களுக்கு மேற்கொள்ளும் சிறப்பு பரிசோதனையில் ஒன்றான எலும்பு அடர்த்தி கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் ரமணா பிரியா,சுகந்த்,பிரசன்னாஆலோசனைவழங் கினர்.100க்கும் மேற்பட்டோர் முகாமில் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !