மேலும் செய்திகள்
அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்
20-Dec-2024
பண்ருட்டி ;பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரில், பா.ம.க., மாவட்ட பசுமை தாயகம், வடக்குத்து ரோட்டரி சங்கம் மற்றம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.வடக்குத்து ரோட்டரி சங்க தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். துணை நிலை ஆளுநர் ரவிசங்கர் வரவேற்றார். பா.ம.க., மாவட்ட துணைத் தலைவர் இளையராஜா, நெய்வேலி மேற்கு ஒன்றிய தலைவர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், ஊடகப்பிரிவு கோகுல், கிளை செயலாளர் தன்ராஜ், முருகன், பள்ளி தலைமை ஆசிரியர் உமா முன்னிலை வகித்தனர்.முன்னாள் பா.ம.க. மாவட்ட செயலர் ஜெகன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட வன்னியர் சங்க பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலகுரு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசன், அன்பு, லோகு, ரகு ஆகியோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி மருத்துவ கழக ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் சபரிஷ், சேரன் தலைமையிலான 30 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர். 630 பேர் பயனடைந்தனர்.
20-Dec-2024