இயன்முறை மருத்துவ முகாம்
சிதம்பரம்; குமராட்சி ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த சேவை ஊர்தியின், மூலம் குமராட்சி வட்டாரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்முறை மருத்துவம், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி, இயன்முறை மருத்துவர் ஆனந்த், மனநல ஆலோசகர் டாக்டர் பிரவீனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.சமூக உதவியாளர் உமாசங்கரி, சமூக மறுவாழ்வு பணியாளர்கள் ராஜாராமன், சுதா, மதியழகி ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 35 மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது.