உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை

சிதம்பரம், : சிதம்பரத்தில் மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், திருப்பதி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகள் ரக்க்ஷனா, 28; கோயம்புத்துாரில் பல் மருத்துவம் (பி.டி.எஸ்.,) படித்து முடித்து, சிதம்பரம், அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.டி.எஸ்., படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார். இந்த மாணவி, முத்தையா நகரில் சக மாணவிகளுடன், வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லுாரிக்கு சென்று வந்தார். தற்போது தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள சிதம்பரம் வந்து, தனது அறையில் தங்கியிருந்தார்.ரக்க்ஷனா அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் திடீர் வயிற்று வலியால் அவதியடைந்த அவர், தனது தாயுடன் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனிருந்த தோழிகள் வெளியில் சென்ற நேரத்தில், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாணவியின் தந்தை ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை