உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் துவக்கி வைப்பு
புவனகிரி: புவனகிரி ஒன்றியம், மஞ்சக்கொல்லை மற்றும் அழிச்சிக்குடி ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம், உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'தமிழக மக்களை ஒன்றிணைக்க ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் கிராமம், நகரம் என பூத் வாரியாக உறுப்பினர் சேர்க்கையை அதிகளவில் துவங்க வேண்டும்' என்றார். ஒன்றிய செயலாளர் மதியழகன், ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி, தேர்தல் பொறுப்பாளர்கள் பரசுராமன், தளபதிபிரியன், முன்னாள் கவுன்சிலர் ஜெயமாலா, கிளை செயலாளர் பாலமுருகன், இளைஞரணி கவுதமன், சுதா கலைச்செல்வன், செல்வகுமார் உடனிருந்தனர்.