மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசார கூட்டம்
18-Aug-2025
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தந்தை, புலவர் துரை நாகராசனார் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதி.மு.க., மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவகுமார் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கானுார் பாலசுந்தரம், அறக்கட்டளை நிர்வாகி ஆசிரியர் அருள்பிரகாசம் முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., துரை நாகராசனார் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் குமார், ரெங்கம்மாள், செல்வம், கருணாகரன், சுந்தரமூர்த்தி, ரெங்கசாமி, பூமாலை கேசவன், முருகையன், எள்ளேரி பிரபு, வசந்த், டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஜெய்சங்கர் சுவாமிநாத சிவப்பிரகாசம், செந்தில்குமார், அசோகன், கலியபெருமாள், பாரதிதாசன், சுரேஷ்குமார், பாலசந்தர், சோழன், பழனிசாமி, விஸ்வலிங்கம், மாணிக்கவேல், மயில். குணசேகரன், தட்சணாமூர்த்தி, ஜான்போஸ்கோ, அன்பழகன், பாலசுப்பிரமணியன்தொழிற் சங்க அண்ணாதுரை, மகேஷ்,ய் ராஜசேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.
18-Aug-2025