உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எடச்சித்துார் பள்ளியில் மனநல திட்டப் பயிற்சி

எடச்சித்துார் பள்ளியில் மனநல திட்டப் பயிற்சி

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், மனநல திட்டப் பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயபிரகாஷ் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அக்பர் முன்னிலை வகித்தார். விருத்தாசலம் வட்டார வளமைய பயிற்றுனர் மரிய ஸ்டெல்லா பயிற்சி அளித்தார். அதில், வளர் இளம் பருவத்தினரின் எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்மறை சிந்தனைகளை கடந்து நேர்மறை மனநலத்துடன் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் புவனேந்திரன், ராஜிவ்காந்தி, குமரவேல், சிவகாமி, உமா மகேஸ்வரி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் கந்தவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை