மேலும் செய்திகள்
குட்கா விற்ற கடைக்கு சீல்
05-Apr-2025
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே மனநலம் பாதித்த அரசு ஊழியர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.குறிஞ்சிப்பாடி அடுத்த சின்ன கானாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் ராஜேந்திரன், 42; அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் என்.ஓ. சி. எல் தனியார் கம்பெனி எதிரே உள்ள, பழைய கட்டிடத்தில் பூச்சி மருந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
05-Apr-2025