மனநலம் பாதித்தவர் மாயம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் வேல்முருகன், 34. மனநலம் பாதித்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். அதற்கு வீட்டில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.