வணிகர்கள் குறைதீர்வு கூட்டம்
கடலுார் : கடலுார் கோட்ட வணிக வரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாக வணிகர்கள் குறைதீர்வு கூட்டம் கடலுாரில் நடந்தது. கோட்ட இணை ஆணை யர் சங்கரமூர்த்தி தலைமை தாங்கினார். துணை ஆணை யர்கள் சத்யா, பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சேம்பர் ஆப் காமர்ஸ் கடலுார் தலைவர் துரைராஜ் பேசினார். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாக வியாபாரிகளின் சந்தேகங்களுக்கு வி ளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் கடலுார் மாநகர வணிகர் சங்க நிர்வாகிகள், பட்டய கணக்காளர்கள், விற்பனை வரி ஆலோசர்கள், கணக்காளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.