உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

என்.எஸ்.எஸ்., தின விழா

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் என்.எஸ்.எஸ்., தினம் கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் குமார் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான துணைவேந்தர் கதிரேசன் அறிவு, ஞானம், திறன், ஒழுக்கம் குறித்தும், பதிவாளர் சிங்கரவேல் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் தொண்டுகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ்,சவுந்திரபாண்டியன், ஆலோசனை குழு உறுப்பினர் முகமது யாசின், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்ட அலுவலர் நீலகண்டன் நன்றி கூறினார்.

குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளம் தெருவில் உள்ள திருமங்கையாழ்வார் தீர்த்த குளத்தில் இருந்த மீன்கள் நேற்று காலை திடீரென இறந்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த பேரூராட்சிபணியாளர்கள் விரைந்து சென்று, குளத்தில் இறந்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தினர். விரைந்துசெயல்பட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

நிவாரண உதவி

சிதம்பரம் அடுத்த தச்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது வீடு தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. அவரது குடும்பத்திற்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பாத்திரங்கள், துணி, மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட ரூ.10 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. சாசனத் தலைவர் முகமது யாசின், செயலாளர் தீபக்குமார், தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஏகாம்பரம், முன்னாள் தலைவர் நடனசபாபதி உடனிருந்தனர்.

இலவச மருத்துவ முகாம்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் இலவச மருத்துவ முகாமை ஏ.எம்.எம். அறக்கட்டளை, என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தின. முகாமில், 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களை, அருணாசலம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். கமிஷ்னர் கிருஷ்ணராஜன் மரக்கன்றுகளை நட்டார். துணைத்தலைவர் கிரிஜா, கவுன்சிலர் முத்தமிழன், இன்ஜினியர் வெங்கடாஜலம், வி.சி., நகர செயலாளர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுாரில், பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் அரசு பணியாளர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவராஜ் வரவேற்றார். துணை தலைவர் தெய்வசிகாமணி, துணை செயலாளர்கள் தமிழ்செல்வன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சரவணன், மாநில செயலாளர் ஞானஜோதி, குப்புசாமி சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பதவி உயர்வு, பணி நியமனம், தொழில்வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை