உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் இல்ல திருமண விழா

எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலாளர் இல்ல திருமண விழா

புவனகிரி: எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டத் துணைச் செயலாளர் தாதம்பேட்டை அண்ணாராமலிங்கம் இல்ல திருமண விழாவில் மணமக்களை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினார். எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டத் துணைச் செயலாளரான கட்சி பேச்சாளர் தாதம்பேட்டை அண்ணாராமலிங்கம் சகோதரர் ராஜா நடராஜன்-மாலதி தம்பதியின் மகள் பொறியாளர் கமலிக்கும், சிதம்பரம் மனோகர் கிரிஜா தம்பதியின் மகன் பொறியாளர் கிரிதர் திருமணம் சிதம்பரம் வண்டிகேட் சிவன் திருமண மஹாலில் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hkw5noyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கருப்பன் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், அமைப்பு செயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஜெ., பேரவை செயலாளர்கள் டாக்டர் பாலசுந்தரம், உமாகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேன் எம்.எல்.ஏ., பாண்டியன் எம்.எல்.ஏ., ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினர். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் வாழ்த்து கடிதம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட சேர்மன் திருமாறன், அமைப்பு செயலாளர் தோப்பு சுந்தர், மாவட்ட நிர்வாகி குமார், பேச்சாளர் தில்லை கோபி, வழக்கறிஞர் முருகுமணி, முன்னாள் சேர்மன் இளஞ்செழியன், பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் பிரபு, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் லதா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா ரகுராமன் உள்ளிட்ட வாழ்த்தினர். எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்டத் துணைச் செயலாளர் தாதம்பேட்டை அண்ணாராமலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை