மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல விழா
25-Apr-2025
கடலுார் : கடலுாரில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்தநாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் கடலுார் பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவில், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, சுப்புராயலு நகர் குளோபல் ஆதரவற்றோர் சிறப்பு பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்.,இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாநகர கவுன்சிலர் தட்சணா, நெசவாளர் பிரிவு குணசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ரவி, செயலாளர் ராஜி, ஆனந்தராஜா, கோவிந்தன், எம்.ஜி.ஆர்.,இளைஞரணி துணை செயலாளர் பிரபாகரன், நிர்வாகிகள் சரவணன், சுப்புராயலு, குமரவேல், ராஜாராமன், மணிமாறன், மகேஷ், விவேக், ஜெயகரன், சந்துரு, அமுதன், கவுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Apr-2025