மேலும் செய்திகள்
சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
09-Oct-2025
மின்னல் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு
04-Nov-2025
காட்டுமன்னார்கோவில். நவ. 8-: காட்டுமன்னார் கோவில் அருகே, காணாமல் போன பால் வியாபாரி குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் செந்தில் 64, பால் வியாபாரி. இவர் கடைவீதியில் பால் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 4ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீட்டில் இருந்து வியாபாரத்திற்கு சென்றவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அன்றைய தினம் காலை நாட்டார்மங்கலம் பிள்ளையார் கோவில் அருகில் செந்திலுக்கு சொந்தமான பைக், மொபைல், செருப்பு ஆகியவை கிடந்தன. காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். தீயணைப்பு படை வீரர்கள் நாரை ஏரியில் மூழ்கியிருக்க கூடும் என அவரை அங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். இந்நிலையில் நேற்று நாட்டார்மங்கலம் குளத்தில் காணாமல் போன பால் வியாபாரி செந்தில் சடலமாக மிதந்து கிடந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
09-Oct-2025
04-Nov-2025