உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சுரங்க விரிவாக்க பணி கணக்கீடு துவக்கம்

 சுரங்க விரிவாக்க பணி கணக்கீடு துவக்கம்

மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் என்.எல்.சி., பகுதிகளில் உள்ள பெரியார் நகர், ஐ.டி.ஐ., நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் கணக்கீடும் பணி நேற்று துவங்கியது. அதில் குடும்ப அட்டை எண், ஆதார் எண்,வாக்காளர் அடையாள அட்டை எண், மின் இணைப்பு எண், வீட்டு வரி எண், தொழில், ஆண்டு வருமானம், எத்தனை ஆண்டுகள் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர், எந்த வகை வீடு, புல எண், குடும்ப விபரம் உள்ளிட்ட விவரங்களை துணை தாசில்தார் அன்புராஜ் தலைமையில் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஒ,க்கள் கணக்கீடு எடுக்கும் பணியில் ஈடுப்பட்டனர். கணக்கீடு எடுக்கும் பணி யின் போது என்.எல்.சி., அதிகாரிகள், போலீசார் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை