நிவாரண நிதிக்கு 1 மாத சம்பளம் அமைச்சர் அறிவிப்பு
சிறுபாக்கம்; முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளம் வழங்குவதாக அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார்.பெஞ்சல் புயலால் பெய்த கனமழையில் கடலுார் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.அங்கு, போர்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசு செய்கிறது.இந்நிலையில், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவரை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனும், ஒரு மாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.