உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் பணி புனிதமானது : அமைச்சர் செழியன் பேச்சு

ஆசிரியர் பணி புனிதமானது : அமைச்சர் செழியன் பேச்சு

விருத்தாசலம்: 'கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள்' என பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் பேசினார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பேசியதாவது: உங்களைப்போல ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தவன் தான், நான். தாத்தா பாட்டி கைநாட்டு, அப்பா அம்மா கிறுக்கி எழுதிய குடும்பத்தில் இருந்து வந்து, பச்சை நிறத்தில் கையெழுத்திடும் வாய்ப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அம்பேத்கர், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி வரிசையில் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டத்தால், இன்று பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளங்களை எழுதாமல் பட்டப் படிப்புகளை எழுதுகிறோம். தமிழகத்தை உயர்த்தும் வகையில் முதல்வர் உழைத்து வருகிறார். திருமணம், பிறந்தநாளை விட பட்டம் பெறும் இந்த நாளே திருநாள். ஆரம்பக்கல்வி, மேல்நிலை முடித்து, பட்டம் பெறும் இந்த அறிவு வெளிச்சம் தந்த கல்லுாரி முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்களுக்கு நன்றி செலுத்துங்கள். ஆசிரியர் பணி புனிதமானது. பிரதிபலன் பாராதது. நேரம் காலம் பார்க்காது, மாணவர்கள் நலனுக்காக உழைப்பவர்கள்.' என்று அமைச்சார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை