உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

தொழிற்சாலையால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

கடலுார்: கடலுார் சிப்காட் தொழிற்சாலையில் வெளியான நச்சுப்புகையால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெறுவோருக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார். கடலுார் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென புகை வெளியேறியது. அதனால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கடலுார் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆறுதல் கூறி, சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ஜெயக்குமார், ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை