உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்

கடலுார் ஒன்றிய பகுதியில் அமைச்சர் உணவு வழங்கல்

கடலுார்: கடலுார் ஒன்றிய பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் உணவு வழங்கினார். கடலுார் அடுத்த நல்லாத்துார், கீழ் அழிஞ்சப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு, தட்சிணாமூர்த்தி நகர், ரெட்டிச்சாவடி, செல்லஞ்சேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ரெட்டிச்சாவடி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு உணவு தயாரிப்பதை அமைச்சர் பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, மக்களுக்கு உணவு வழங்கினர். ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !