உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டப் பணிகள் அமைச்சர் ஆய்வு

திட்டப் பணிகள் அமைச்சர் ஆய்வு

சிறுப்பாக்கம் : சிறுபாக்கம் அருகே நடந்த திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கணேசன், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சிறுபாக்கம் அடுத்த விநாயகனந்தல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நிலுவையிலுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, ஆதரவற்ற பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதேபோல், பொயனப்பாடி, கச்சிமயிலுார் மற்றும் காஞ்சிராங்குளம் ஊராட்சிகளிலும், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது, வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், மங்களூர் பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், குமணன், நிர்மல் குமார், சேதுராமன், சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை