உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10 லட்சம் பனை விதைகள் நடப்படும் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

10 லட்சம் பனை விதைகள் நடப்படும் அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே ஊராட்சி கட்டடம் திறப்பு விழா மற்றும் பனை விதை நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.சிதம்பரம் அருகே கூடுவெளிச்சாவடி ஊராட்சியில், கிராம ஊராட்சி செயலக புதிய கட்ட திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். குமராட்சி பி.டி.ஓ., க்கள் சரவணன், சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் புதிய கட்டத்தை திறந்து வைத்தார்.சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் சவுமியா, சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி,அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி,குமராட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்புசத்யநாராயணன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, வல்லம்படுகை ஊராட்சிக்குட்பட்ட பழைய கொள்ளிடக் கரையில் பனை விதை நடும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில்,சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பனை விதை விதைக்கும் பணி துவங்கியுள்ளது. மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிட்டு, ஊராட்சி தோறும் நடப்படுகிறது. வீராணம் ஏரிக்கரைகளிலும் இந்த பன விதை போடப்படுகிறது.தமிழக முதல்வர், பனைவிதைகள் அதிகமாக விதைக்க பட்ஜெட்டில் குறிப்பிட்டு, பனை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் பனைவிதைகள் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 45 ஏக்கர் நிலங்களுக்கு இந்த ஏரி பாசன மூலம் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை