மேலும் செய்திகள்
கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
21-Oct-2024
சிதம்பரம்: கடலுார் மாவட்டத்திற்கு வரும் துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க.,. செயற்குழு கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ., அய்யப்பன், மாநில பொறியாளர் அணி செயலாளர் துரை சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானமுத்து சக்திவேல், சுதா சம்பத் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில், துணை முதல்வர் உதயநிதிக வரும் 24 மற்றும் 25 ம் தேதி, கடலுாரில் நடக்கவுள்ள ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தருகிறார். ஆகவே கடலுார் கிழக்கு மாவட்டம் தி.மு.க., சார்பில் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார். .ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ஆனந்தன், நாராயணசாமி. முத்து பெருமாள், காசிராஜன், விஜயசுந்தரம், டாக்டர் மனோகரன், ஸ்ரீமுஷ்ணம் கோவிந்தராஜ், கடலூர் மாநகர செயலாளர் ராஜா, கடலூர் பகுதி செயலாளர்கள் நடராஜன், சலீம், இளையராஜா, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், அண்ணாமலைநகர் நகர் பேரூராட்சி தலைவர் பழனி, பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
21-Oct-2024