உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு

மாநகர கமிஷனருக்கு அமைச்சர் பாராட்டு

கடலுார் : புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் சிறுவர்கள் பார்த்து மகிழும் வண்ணம் சிறுவர்களுக்கான அரங்கம் அமைத்த மாநகர கமிஷனரை அமைச்சர் பாராட்டினார்.கடலுார் மைதானத்தில் புத்தக திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. அதற்கான தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், இந்த கண்காட்சியில் சிறுவர்கள் கண்டு களிக்கும் வண்ணம் கோளரங்கம், வி.ஆர்.அரங்கம், 3 டி அரங்கம், காமிக்ஸ் அரங்கம் உள்ளிட்ட அரங்கங்களை மாநகர கமிஷனர் அனுவின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ளது என பாராட்டினார்.மேலும் இந்த அரங்கங்களுக்கு நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததை அறிந்த அமைச்சர் பன்னீர்செல்வம் கட்டணத்தை ரத்து செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி