உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் மனைவி நினைவு நாள்

அமைச்சர் மனைவி நினைவு நாள்

சிறுபாக்கம், ;கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான கணேசன் மனைவி பவானி அம்மாள் 3ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி வேப்பூர் அடுத்த கழுதுார் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தில் நடந்தது. அவரது நினைவு இடத்தில் அமைச்சர் கணேசன் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.மேலும், அவரது மகன், தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், குடும்பத்தினர், மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, தி.மு.க. ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், அண்ணாதுரை, நிர்வாகிகள் வெங்கடேசன், சக்திவினாயகம், கருப்புசாமி, நிர்மல், பாபு, குணா, ரகுநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை