மேலும் செய்திகள்
கடலுாரில் லாரி மோதி மீனவர் சாவு
25-Jan-2025
பண்ருட்டி : பண்ருட்டி அருகே காணாமல் போனவர் தென்னை மரத்தில் தூக்கிட்டு இறந்தார். பண்ருட்டி அடுத்த அவியனுார் வடக்கு தெருவை சேர்ந்தவர் காந்தி; இவரது மகன் வெங்கடேசன்,48; மனநலம் பாதித்தவர். இவர் கடந்த 22ம்தேதி முதல் காணவில்லை என புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து வெங்கடேசன் தேடி வந்தனர்.இந்த நிலையில் நத்தம் கிராமத்தில் கொளப்பாக்கம் அஸ்வத்தாமன் என்பவரது சவுக்கு தோப்பில் உள்ள தென்னை மரத்தில் வெங்கடேசன் தூக்கிட்டு அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.இதுகுறித்து தகவலின்பேரில் பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Jan-2025