உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் பணி நிறைவு எம்.எல்.ஏ., பாராட்டு

ஆசிரியர் பணி நிறைவு எம்.எல்.ஏ., பாராட்டு

கடலுார் : கடலுார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தொழிற்கல்வி வேளாண் அறிவியல் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டுவிழா நடந்தது.விழாவிற்கு, கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சு வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் ஆசிரியர் ரவியை பாராட்டி சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை ஆசிரியை விஜயா, டாக்டர் வெங்கட்ரமணன், பொறியாளர் தயாநிதி செய்திருந்தனர்.முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு அலுவலர் ஒன்றியம் முன்னாள் மாநில தலைவர் சூரியமூர்த்தி, தொடக்கக்கல்வி இயக்குநரகம் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ