உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் இருந்து புதிய பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நெய்வேலியில் இருந்து புதிய பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நெய்வேலி : நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிராமங்கள் வழியாக வடலுார் வரை செல்லும் புதிய பஸ் வசதியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நெய்வேலியில் இருந்து தென்குத்து, வாணதிராயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வடலுார் வரை செல்ல பஸ் வசதி செய்துதர பொதுமக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., தமிழக போக்குவரத்துறை அமைச்சரிடம் பேசி, புதிய பஸ் வசதி ஏற்பாடு செய்தார்.இதையடுத்து நெய்வேலி மத்திய பஸ் நிலையத்திலிருந்து வாணாதிராயபுரம் வழியாக வடலூருக்கு செல்லும் புதிய பஸ் வசதியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து பொதுமேலாளர் ராகவன், கிளை மேலாளர் லோகு ஐயப்பன், கமர்சியல் பரிமளம், தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், வாணதிராயபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், தி.மு.க., நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, காசிநாதன், கணேசன், தமிழ்மாறன், ராகுல்காந்தி, மணிவேல் மற்றும் ஊராட்சி செயலாளர் பழனிவேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை