அங்கன்வாடி திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
கடலுார் : கடலுார் அடுத்த காரணப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 14லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்தார். பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பாண்டியன், உதவிபொறியாளர் பிருந்தா, பணி மேற்பார்வையாளர் விஜி முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழரசி பிரகாஷ், முத்துக்குமாரசாமி, அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேல்முருகன், முன்னாள் நிலவள வங்கித் தலைவர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.