உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சகஜானந்தா சிலைக்கு எம்.எல்.ஏ., மரியாதை

சகஜானந்தா சிலைக்கு எம்.எல்.ஏ., மரியாதை

சிதம்பரம் : அ.தி.மு.க., சார்பில், சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநந்தனார் கல்வி கழகத்தை தோற்றுவித்த சுவாமி சகஜானந்தாவின் 135 வது பிறந்தநாளைெயாட்டி, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடந்தது.அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் கோபி, மாவட்ட கழக இணை செயலாளர் ரெங்கம்மாள் மற்றும் நிர்வாகிகள் செல்வம், அசோகன், ரெங்கசாமி, கோவிந்தராசு, ராமலிங்கம், முருகையன், அரிசக்திவேல், சங்கர், வீரமணி, திருவேங்கடம், செல்வராஜ், வெங்கடேசன், கார்த்திமற்றும் நந்தனார் கல்வி கழக பொருப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி