மதுவானைமேடு பகுதியில் எம்.எல்.ஏ., நிவாரணம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த மதுவானைமேடு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேரில் நிவாரணம் வழங்கினார்.சேத்தியாத்தோப்பு அடுத்த மதுவானைமேடு ஏரிக்கரை சாலையோரத்தில் இருந்த கூரைவீடுகள் கனமழை புயலால் பாதிப்பிற்குள்ளானது. அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அங்கன்வாடி மைய கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.புவனகிரி எம்,எல்,ஏ., அருண்மொழிதேவன் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, பிஸ்கெட், பால், பிரட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். நிர்வாகிகள் உடனிருந்தனர்.