மேலும் செய்திகள்
பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
30-Dec-2024
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் ரூ. 1.27 கோடி மதிப்பில் நரிக்குறவர்களுக்கு, 29 வீடுகளை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினார்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்று, 29 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை வழங்கினார். பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஒ.சங்கர், தாசில்தார் ஆனந்த், உதவி மின்பொறியாளர் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், சர்வேயர் குணசேகர்,தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் குருநாதன், வீரராமச்சந்திரன்,தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
30-Dec-2024