மேலும் செய்திகள்
ஆற்றுமணல் கடத்திய பெண்கள் கைது
06-Feb-2026
விருத்தாசலம்: அரசு மருத்துவமனையில் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டில் இருந்து கடந்த, 17ம் தேதி இரு மொபைல் போன்கள் திருடுபோனது. விருத்தாசலம் போலீசார் அப்பகுதியில் இருந்த, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், மணலுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த உத்திரவேல், 44, என்பவர் மொபைல்போன்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, உத்திரவேலுவை கைது செய்தனர்.
06-Feb-2026