குரங்குகள் அட்டகாசம்: மக்கள் அச்சம்
புதுச்சத்திரம்: வில்லியநல்லுார் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் பகுதியில் 1,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது 10க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகளின் உள்ளே சென்று உணவு பொருட்களை, வாரி இறைத்து சேதப்படுத்துகின்றது. மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்வதால் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.