உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாதாந்திர சிறப்பு கூட்டம்

 மாதாந்திர சிறப்பு கூட்டம்

திட்டக்குடி: திட்டக்குடியில் திருக்குறள் பேரவை சார்பில் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடந்தது. திருக்குறள் பேரவை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சின்னசாமி, பொருளாளர் அன்பானந்தன் முன்னிலை வகித்தனர். செயலாளர் திரு நாவுக்கரசு வரவேற்றார். இதில், 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் பேரவை உறுப்பினர் வினோதினி, திருமண பருவம் குறித்து பேரவை வாழ்நாள் உறுப்பினர் ஆறுமுகம், தாய்மை பருவம் குறித்து செயற்குழு உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். அலுவலக செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை