உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபட் - வேன் மோதல் தாய், தந்தை, மகன் மரணம்

மொபட் - வேன் மோதல் தாய், தந்தை, மகன் மரணம்

கடலுார்: விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகினர். கடலுார், முதுநகர் அடுத்த கொடிக்கால்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி, 65. அவரது மனைவி ராமாயி, 62. மகன் ராஜேஷ்குமார், 33. தந்தை, மகன் கூலி தொழிலாளர்கள். பக்கிரிசாமி, மனைவி, மகனுடன் நேற்று மதியம் நெல்லிக்குப்பத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, கடலுாரில் இருந்து மொபட்டில் சென்றார். மொபட்டை ராஜேஷ்குமார் ஓட்டினார். கடலு ார் - நெல்லிக்குப்பம் சாலையில் கோண்டூர் அருகே சென்றபோது, எதிரில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த வேன் மொபட் மீது மோதியது. விபத்தில் பக்கிரிசாமி, ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ராமாயி கடலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை