உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி

மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி தையல்நாயகி,63; இவர் கடந்த 21ம்தேதி விழுப்புரம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது மகள் தெய்வானை , மருமகன் அபிராமனுடன் பைக்கில் சித்திரைசாவடி கிராமத்திற்கு வந்து வந்து கொண்டிருந்தார். பண்ருட்டி-கோலியனுார் சாலை அருகே வந்த போது, பைக் ஓட்டி வந்த அபிராமன், நிலைதடுமாறியதால், சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் தையல்நாயகி பலத்த காயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத் து வ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இறந்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !