மகனை இழந்த தாய் நிவாரணம் கேட்டு மனு
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், சிதம்பரம் அடுத்த விளாகம் கிராமத்தைச் சேர்ந்த சகுந்தலா அளித்த மனு: எனது கணவருக்கு பார்வை இல்லை. நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மூத்தமகன் குமார், கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி, சிதம்பரம் நகரத்தில் வேலை செய்து விட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, குழந்தைகள் வார்டு 'ஏ-' பிளாக் பின்புற சாலை வழியாகசென்றார். அப்போது கால் தடுமாறி அங்கு திறந்து கிடந்த வடிகால் சாக்கடை செப்டிங் டேங்கில் தவறி விழுந்து இறந்தார். ஒரு வாரம் கழித்து சடலமாகமீட்கப்பட்டார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசின் அலட்சியம் காரணமாக எனதுமகன் இறந்துள்ளார். எனவே, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.