மேலும் செய்திகள்
கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
08-Aug-2025
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை சலங்குகார தெருவில் கூட்டுறவுத் துறை சார்பில், முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா நடந்தது. பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கினார். முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். தாயுமானவர் திட்டத்தை, பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் துவக்கி வைத்து, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர். விழாவில், நகர அவைத் தலைவர் தங்கவேல், கவுன்சிலர்கள் சரவணன், மாரியப்பன், நிர்வாகிகள், கணேசமூர்த்தி, குன் முகம்மது, ஜாபர் அலி, சிவபாலன், கோமு, அலி அப்பாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விற்பனையாளர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.
08-Aug-2025